Thursday, April 06, 2006

இருட்டடிப்பு செய்வது பத்திரிக்கை தர்மமா?

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பிரச்சார்த் தொடக்க விழா, நேற்று சென்னை புரசைவாக்கத்தில் நடந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் பங்கேற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய தலைவர்களின் உரையை தினமலர் விரிவாக வெளியிட்டுள்ளது. தினத்தந்தியும் விரிவாகவே வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் ஆகிய இருவரின் பேச்சுக்களை 4 நாளிதழ்களுமே வெளியிடவில்லை. இவர்களும் பங்கேற்று உரையாற்றினார்கள் என்று செய்தியை முடித்துக் கொண்டன. சிறுபான்மை இனத்தவர்களான இந்த 2 தலைவர்களின் பேச்சுக்களை மட்டும் இருட்டடிப்பு செய்வது அறமா?

Courtesy: தேர்தல் செய்தி கண்காணிப்பு 2006

No comments: