Monday, April 03, 2006

வரதட்சிணைக்காக கொலை

வரதட்சிணைக்காக கொலை: 30 ஆண்டுகளாக பெண் குழந்தைகளே இல்லாத 5 கிராமங்கள்

போபால், ஏப். 3: வரதட்சிணை கொடுத்து ஏழ்மை நிலைக்கு சென்று விடுவோமே என்ற கவலையில் கடந்த 30 ஆண்டுகளாக பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்பட்டு விடுகின்றனர்.

இந்த கொடூரச்சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் 5 கிராமங்களில் நடந்து வருகிறது.

இத்தகவலை ம.பி. மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கிருஷ்ண காந்த் தெரிவித்தார்.

பெண் குழந்தைகள் கொல்லப்படுவதால், 30 ஆண்டுகளாக அந்த கிராமங்களில் எந்தத் தம்பதிக்கும் மகள்கள் இல்லை. பெண் குழந்தைகளை காக்கும் பணியில் தற்போது மாநில மகளிர் ஆணையம் இறங்கி உள்ளது.

கிராமங்களுக்குச் சென்று பெண் குழந்தைகளை காக்கும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்படும் கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

Courtesy: Dinamani.com

No comments: