Tuesday, April 04, 2006

கல்லூரி மாணவியை கற்பழித்த போலீஸ்காரர்

போலீஸ் நிலையத்தில்
கல்லூரி மாணவியை கற்பழித்த போலீஸ்காரருக்கு 12 ஆண்டு ஜெயில்


மும்பை, ஏப்.4-

மும்பையில், போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியை கற்பழித்த, போலீஸ்காரருக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

கல்லூரி மாணவி

மும்பையில் மராட்டிய அரசு தலைமைச் செயலகம் அருகே உள்ளது மெரைன் டிரைவ் புறக்காவல் நிலையம். இதன் அருகே உள்ள ஒரு அபார்ட்மென்ட் பகுதியில், கடந்த ஆண்டு, ஏப்ரல் 21-ந் தேதி பகலில், கல்லூரி மாணவி ஒருவர் (வயது17) தனது காதலனுடன் உல்லாசமாக இருந்தார். அதை அங்கிருந்த காவலாளி பார்த்து விட்டார். உடனே இரண்டு பேரையும் பிடித்து, மெரைன் டிரைவ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கற்பழிப்பு

அப்போது சுனில்மோர் என்ற போலீஸ்காரர் மட்டும் அங்கு இருந்தார். அவர், கல்லூரி மாணவியை மட்டும் போலீஸ் நிலையத்தில் இருக்குமாறு கூறி விட்டு, காதலனை விரட்டி விட்டார். பின்னர், தனியாக இருந்த மாணவியை பலவந்தமாக கற்பழித்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிஸ்மிஸ்-வழக்கு

இதையடுத்து போலீஸ்காரர் சுனில்மோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டது உண்மைதான் என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சுனில்மோர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

பின்னர் போலீசார் அவரை கைது செய்து மும்பை கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீலாக உஜ்வால் நிகாம் என்பவர் ஆஜராகி வாதாடினார்.

இதனிடையே, சுனில்மோர் ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை கோர்ட்டு நிராகரித்து விட்டது. மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு கூறும்படி, செசன்சு கோர்ட்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

12 ஆண்டு சிறை

இதைத் தொடர்ந்து மும்பை செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை சூடு பிடித்தது. அரசு தரப்பில் மொத்தம் 27 சாட்சிகள் ஆஜர் செய்யப்பட்டனர். கற்பழிக்கப்பட்ட கல்லூரி மாணவியும், அவளது காதலனும் தனித்தனியாக சாட்சியம் அளித்தனர். பின்னர் மாணவி மட்டும் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.ï.சாண்டிவால், போலீஸ்காரர் சுனில்மோருக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

மேலும், சுனில்மோரிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மரண தண்டனைக்கு இதுமேல்

தீர்ப்பை கேட்டதும், சுனில்மோர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசினார்.

நான் ஒரு அப்பாவி. எந்த தப்பும் செய்யாமல் என்னை குற்றவாளியாக்கி விட்டனர். எனக்கு 12 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது மரண தண்டனையை விட எவ்வளவோ மேல் என்று அவர் அப்போது தெரிவித்தார்.

Courtesy: Dailythanth.com

No comments: