நேபாளத்தில் பசுவைக்கொன்றதாக பெண்ணுக்கு சிறைதண்டனை
நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நீதிமன்றம் ஒன்று, பசுமாட்டினை கொன்ற குற்றத்திற்காக, பெண்மணி ஒருவருக்கு நீண்ட கால சிறைத்தண்டனையினை விதித்துள்ளது. இந்து மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நேபாளத்தில் பசுமாடுகள் புனிதமாக கருதப்பட்டு, அவற்றினை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
தலைநகர் காத்மண்டுவின் வடமேற்கு பகுதியில், சுமார் ஐந்நூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சன்குவாசபா மாவட்டத்தின் நீதிமன்றமானது, குற்றம் சாட்டப்பட்ட பெண்மணிக்கு, அதிகபட்ச தண்டனையான 12 ஆண்டுகால சிறைத்தண்டனையினை விதித்துள்ளது. கிரிபா போதேனி என்று அழைக்கபடும் இந்த பெண்மணி, பசு மாட்டினை கொன்று, உண்டு விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதினை தொடர்ந்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். ஆனால் தான் பசு மாட்டினைக் கொல்லவில்லை என அப்பெண்மணி மறுத்துள்ளார்.
நன்றி: பிபிசிதமிழ்.காம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment